சந்தேகத்திற்கு இடமான ஆயுதங்கள் இருப்பதாக வெலிகம வெலிபிடிய பிரதேசத்தில் அடக்கப்பட்ட ஜனாஸா கபுருகள் தோண்டப்பட்டு சோதனை.
Posted by WeligamaNews on May 10, 2019
வெலிகம வெலிபிடிய பிரதேசத்தில் மலே பள்ளிவாசல் மையவாடியில் அடக்கப்பட்டிருக்கும் கப்ர் இல் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸ் ற்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து
காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து வெலிகம வெலிபிடிய பிரதேசத்தில் மையவாடியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்
அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா கபுருகள் சில தோண்டப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக பிரதேசவசிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான பொருற்கள் எதுவும் கண்டெடுக்க படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment