அடுத்த குண்டு வெடிப்பு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மஹிந்த
Posted by WeligamaNews on May 05, 2019
இலங்கையில் நாளை அல்லது நாளை மறுதினம் மேலும் குண்டுகள் வெடிக்கலாம் எனவும் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று மஹிந்த கூறிய விடயத்தை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
“இலங்கையில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
எனினும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை தற்போது வழமைக்கு திரும்பி வருகிறது.
இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக பொலிஸ் மற்றும் முப்படையினர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment