தனிமையடைவதை விட இலங்கையர்களாகப் பயணிப்பதே எங்களுக்குப் பாதகாப்பானதாகும்
Posted by WeligamaNews on June 23, 2019
1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போது பேராசிரியர் குணபால மலலசேகர தலைமையிலான வலதுசாரி குழுவினர் தேசபிதா டீ.எஸ் சேனாநாயக்கவை சந்தித்து இலங்கை சிங்கள பௌத்த அரசாக (Sinhala Buddhist State) பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். பிரதமர் டீ.எஸ் சேனாநாயக்க அவர்கள் இந்தக் கோரிக்கையை சாதுரியமான முறையில் நிகாரித்தார்.
''நாட்டை சிங்கள பௌத்த அரசாக ஏற்றுக்கொள்ள முடியாது: இந்தக் கோரிக்கை சிங்கள பௌத்த மக்களின் நலனுக்கு எதிரானதும், ஆபத்தானதும் " ஆகும் என்று கூறினார்.
நாங்கள் 60 இலட்சம் பேர் மாத்திரமே இங்கு வசித்துவருகிறோம். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை புறந்தள்ளி, சிங்கள பௌத்தர்கள் என்று எம்மை அடையாளப்படுத்திக்கொள்வோம் எனில் நாம் உண்மையாகவே தோல்வியடைந்துவிடுவோம்.
சிங்கள பௌத்தர்களுடன் வசிக்கும் ஏனைய சிறுபான்மையினர் இங்கு சிறுதொகையாக இருந்தாலும், பிராந்தியத்திலும் உலகநாடுகளிலும் அவர்கள் எங்களை விட சனத்தொகையில் அதிகானவர்களாக உள்ளார்கள். எனவே நாங்கள் தனிமையடைவதை விட இலங்கையர்களாகப் பயணிப்பதே எங்களுக்குப் பாதகாப்பானதாகும்.
இதனையே உண்மையான நாட்டுப் பற்றி என்கிறோம். அதனால் தான் டீ.எஸ் சேனாநாயக்கவை தேச பிதா என்று இன்றும் அழைக்கிறோம்.
புகழ்பெற்ற ராஜதந்திரியும், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக அவர்களின் பதிவில் இருந்து.
0 Comments:
Post a Comment