வெலிகம கொலெதண்ட பள்ளிவாசலை சோதனையிட வந்ததாக கூறிய பாதுகாப்பு படையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள படைவீரர் போலீஸாரால் கைது
Posted by WeligamaNews on June 05, 2019
இன்று பிற்பகல் 1.45 மணி அளவில் 5 பேர் முச்சக்கர வண்டியில் வெலிகம கொலெதண்ட பள்ளிவாசலுக்கு வந்து அங்கு பள்ளிவாசல் இமாமை சந்திக்க வேண்டும் என்பதாகவும் அவரை தாம் முன் கூட்டியே அறிந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்கள். பின்னர் அங்கு சென்ற அப்பிரதேச வாலிபர் அவரின் அடையாள அட்டையை கேட்ட போது அவர் கொடுக்க மறுத்துள்ளார் பின்னர் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அப்பிரதேச மக்கள் பள்ளிவாசலை நோக்கி விரைந்தனர். உடனடியாக பொலிஸ் இற்கு தொலைபேசி மூலம் அறிவித்ததை அடுத்து போலீஸ் அப்பிரதேசத்திற்கு வந்த 5 பேரில் 2 பேரை கைது செய்துள்ளனர்.
அடுத்த மூவரும் முச்சக்கர வண்டியுடன் தப்பி ஓடி உள்ளனர் முச்சக்கர வண்டியின் இலக்கம் போலீசார்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணையில் அவர் பாதுகாப்பு துறையில் இருந்து நீக்கப்பட்ட ஒரு படை வீரர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை வெலிகம போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

0 Comments:
Post a Comment