மாத்தறை ஹம்பாந்தோட்டை புதிய அதிவேக பாதை வேலைகள் இடைநிறுத்தம்.
Posted by WeligamaNews on July 03, 2019
மாத்தறை ஹம்பாந்தோட்டை புதிய அதிவேக பாதை வேலைகளுக்காக சீன கெதிக் நிறுவனற்திற்கு இலங்கை அரசாங்கம் 10 மாதகாலமக பணம் செலுத்தாமையினால் சீன நிறுவனம் உடனடியாக நேற்று முதல் 2 ஆம் திகதி முதல் வேலைகளை இடை நிறுத்தியுள்ளது.
கடந்த 10 மாததிற்கான டொலர் 80 மில்லியன் இலங்கை அரசாங்கத்தினால் குறித்த சீன நிறுவனத்திற்கு வழங்கவில்லை.
இதனால் மாத்தறை பெலியத்தை புதிய அதிவேக பாதை வேலைகள் நேற்று 2 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளது
வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்கள் பாதை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாத்தரை பெலியத்தை அதிவேக பாதை 30 km தூரத்தை கொண்ட பாதை காபட் இடும் பணிகளின் இறுதி கட்டத்திலே இவ்வாறு வேலைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
பாதை நிர்மானிக்கும் பணிகளை அரசாங்கம் மும்முரப்படுத்துமாறு வேண்டிக்கொண்டதை அடுத்து இரவு பகல் பாராது தாம் வேளைகளில் ஈடுபட்டதாக சீன நிறுவனம் தெரிவித்துள்ளது இதனால் 90 வீதமான வேலைகள் பூர்த்தி செய்யபட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட சீன நிறுவனம் தவிர்ந்த மேலும் 5 உப சீன நிறுவனங்கள் ,மற்றும் இலங்கை நிறுவனம் ஒன்றும் இப்பணியில் இருந்து தற்போது வேளைகளில் இருந்து ஒதுங்கியுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்டம் இந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டிருந்தது.வேலைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டமையினால் ஒரு நாளைக்கு 100 மில்லியன் ரூபாய் சீன நிறுவனத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்த நஷ்ட ஈட்டு தொகையை இலங்கை அரசாங்கம் செலுத்த நேரிடும் எனவும் அந்த நிறுவனத்தின் செயற்த்திட்ட முகாமையாளர் தெறிவித்துள்ளார்.
என்றாலும் இது தொடர்பாக நேற்று 2 ஆம் திகதி இலங்கை உயர் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளன இதனை அடுத்து தற்காலிகமாக சில நாற்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட இருந்த வேலைகளை ஆரம்பிக்க சீன நிறுவனம் முன்வந்துள்ளது.

0 Comments:
Post a Comment