ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக போராட்டம் : ரத்ன தேரர்
Posted by WeligamaNews on July 30, 2019
மீண்டும் அமைச்சு பதவியினை பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அஹிம்சைவழியிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், ஜனாதிபதி உட்பட அரசாங்கம் விரைவாகமாற்றியமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.ராஜகிரியவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு தொடர்பில் அரசாங்கததிற்கு எவ்வித அக்கறையும் கிடையாது. முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே பதவி துறந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை வழங்கியுள்ளது.
இச்செயற்பாட்டிற்கு எதிராக அஹிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment