களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி 6 பேர் பலி!
Posted by செய்திகள் on August 04, 2019
இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி 6 பேர் பலி!
களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 56 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்த 56 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று காலை 5.15 மணியளவில் எல்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் 3 பெண்களும் 3 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரியவருகிறது.
-Almashoora Breaking New
0 Comments:
Post a Comment