எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய வாய்ப்பு.
Posted by tahaval on September 23, 2019
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தென், சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லி மீட்டர்
வரையில் கடும் மழை பொழிய கூடும் வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மழை பெய்யும் வேளைகளில் ஆங்காங்கே இடிமுழக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதால் மின் உபகரணங்களை பயன்படுத்துதல் மற்றும் வயல் நிலங்களில் தொழிலில் ஈடுபடுதல், மரங்களுக்கு அருகில் ஒதுங்கியிருந்தல் ஆகிய நடவடிக்கைகளில் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment