மாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Posted by tahaval on September 27, 2019
மாத்தறை கிரிந்த பிரதேசத்தில்
முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று சிங்கள முஸ்லீம் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
நேற்று இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சிறு கைகளப்பாக மாறி போலீஸ் மற்றும் விசேட அதிரடி படையினரின் தலையீட்டில் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.
எனினும் இன்று முஸ்லீம் நபர் ஒருவர் இன்னொருவருக்கு வீசி எறிந்த போத்தல் விகாரை வளாகத்தில் விழுந்ததை அடுத்தே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை வேளையில் அப்பிரதேசத்தில் உள்ள சில முஸ்லீம் வீடுகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அங்கு படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment