இரத்தினபுரியில் எலிக்காய்ச்சல் அதிகரிப்பு; 780 பேர் பாதிப்பு
Posted by tahaval on October 20, 2019
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 780பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக தொற்று நோய்கள் அதிகரிக்கப்பட்டு வருவதாக இரத்தினபுரி மாவட்ட சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடளாவியரீதியில் 3582பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் 780பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கணிப்பீட்டின் பிரகாரம் களுத்துறை மாவட்டத்தில் 460பேர் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் காய்ச்சல், கண் சிவத்தல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடும் காய்ச்சல், கண் சிவத்தல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment