ஆங்கில பாடப் பரீட்சை வினாத்தாள் வெளியாகியமையால் மாற்று நடவடிக்கை
Posted by tahaval on November 23, 2019
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 10 மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆண்டிறுதிப் பரீட்சையில்
ஆங்கில பாடப் பரீட்சை வினாத்தாள் வெளியாகியமையால் மீள அப் பரீட்சை நடைபெறவுள்ளது.
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 11, தரம் 10, தரம் 9 ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஆண்டிறுதிப் பரீட்சை நடத்தப்பட்டு வருகின்றது. இதில் கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற தரம் 10 மாணவர்களுக் கான ஆங்கில பாடப் பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஊடாக வவுனியாவில் வெளியாகி இருந்தமை கண்டுபிடிக்கப் பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த பரீட்சையானது எதிர்வரும் செவ்வாய்க் கிழமை மீள நடைபெறும் என வடமாகாண கல்வித் திணைக்கள வலயக்கல்விப் பணிமனை ஊடாக பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது. இதேவேளை, குறித்த வினாத்தாள் வெளியாகியமை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
0 Comments:
Post a Comment