தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவிப்பு
Posted by tahaval on November 29, 2019
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது பதவியிலிருந்து ஓய்வு பெற எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் ஆணைக்குழுத் தலைவர் அறிவித்துள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட தேசிய சுதந்திர ஆணைக்குழுக்களின் தலைவர்கள் தாங்கள் ஓய்வு பெற விரும்பும் நிலையில், அச்சபைக்கு அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போதைய அரசியலமைப்பின் தலைவரான சபாநாயகர் கருஜயசூரியவுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
0 Comments:
Post a Comment