மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக நியமிக்க முஸ்தீபு
Posted by tahaval on November 20, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை இராஜினாமா செய்ததன் பின்னர், அடுத்த பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை
நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் செய்திச் சேவை அறிவித்துள்ளது.
தற்போதைய பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாகவும், நாளை (21) அது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் பிரதமர் செயலக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாவதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (
0 Comments:
Post a Comment