அரச நியமனத்தை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Posted by tahaval on November 30, 2019
2020 ஆம் ஆண்டளவில் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப கல்வியை மேம்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்காக 50,000 உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment