நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை
Posted by tahaval on November 30, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழையுடனான காலநிலை தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தவகையில், வடக்கு, கிழக்கு, ஊவா, வடமேல், சப்ரகமுவ மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இந்த காலநிலை நிலவுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இன்று (30) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் மற்றும் இரவு வேளையில், குறிப்பாக இரவு 11.00 மணி வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (மு)
0 Comments:
Post a Comment