மூன்று மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் தாமதமாக வாய்ப்பு .தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விசேட அறிவித்தல்
Posted by tahaval on November 17, 2019
மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இந்த வகையில், இரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் பெறுபேறுகளே இவ்வாறு தாமதம் ஏற்படும் எனவும் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பிரதேசங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சிறியளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்கு தாமதம் ஏற்பட்டதாகவும், இதனால் வாக்கு எண்ணும் பணியில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விசேட அறிவித்தல் ஒன்றில் ஆணைக்குழுத் தலைவர் கூறியுள்ளார்.
இதேவேளை, வாக்குப் பெட்டி எடுத்துச் சென்ற வாகனமொன்றும் திடீர் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதனால், அதிகாரிகளுக்கோ, வாக்குப் பெட்டிக்கோ எந்தவித பாதிப்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் முடியும் தருவாயில் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ள மாவட்ட தேர்தல் முடிவுகளில் உண்மையில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், உத்தியோகபுர்வ தகவல்கள் வெளியிடும் வரை எதிர்பார்த்திருக்குமாறும் அவர் மேலும் கூறியுள்ளார். (மு)
0 Comments:
Post a Comment