38 பேருடன் சிலி இராணுவ விமானம் மாயம்
Posted by tahaval on December 10, 2019
38 நபர்களுடன் அந்தாட்டிகாவில் உள்ள விமானத்தளத்திற்குச் சென்ற சிலி இராணுவ விமானம் நேற்று திங்களன்று காணாமல் போயுள்ளதாக சிலி விமானப்படை தெரிவித்துள்ளது.
ஹெர்குலஸ் சி 130 என்ற விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 4.55 (19.55 GMT) மணிக்கு புறப்பட்டு சென்றதாகவும், சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சி 130 ஹெர்குலஸில் விமானத்தில் 38 பேர் பயணித்துள்ளனர், அவர்களில் விமானத்தின் குழு உறுப்பினர்கள் 17 பேரும், பயணிகள் 21 பேரும் இருந்துள்ளனர் என்று விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானத்துடனான தொடர்பு இழந்த பின்னர் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டது, மேலும் விமானத்தை தேடும் பணியில் சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Share
விமானத்துடனான தொடர்பு இழந்த பின்னர் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டது, மேலும் விமானத்தை தேடும் பணியில் சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Share
0 Comments:
Post a Comment