பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டில்சான் அறிவிப்பு
Posted by tahaval on December 30, 2019
இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் திலகரத்ன டில்சான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்தள்ளார்.
அதன்படி அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தின் கீழ் காலி மாவட்டத்திலிருந்து போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய தினம் களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து அவர்களின் அனுமதியை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment