மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும்
Posted by tahaval on December 16, 2019
மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் எதிர்வரும் மார்ச்மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படுவது உறுதியாகும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (16) ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
தனக்கு செயற்படுவதற்கு பலமான ஒர் அரசாங்கம் அவசியமாகும் எனவும் இந்த பாராளுமன்றத்தில் எதனையும் முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
காலாவதியாகியுள்ள அனைத்து அரச நிறுவனங்களினதும் தேர்தலை நடாத்துவதே எனதும், பிரதமரினதும் ஒரே எதிர்பார்ப்பாகும் எனவும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தினாலேயே எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment