தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விடுக்கப்பட்ட வேண்டு கோளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Posted by tahaval on December 10, 2019
தன்னை ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான தேர்தல் சட்ட திட்டங்களை சீர்திருத்தம் செய்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் சேவை அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால், அவரது இராஜினாமாக் கடிதத்தை ஏற்க முடியாதென ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அவர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment