முகத்திறையை நீக்காததால் ரயிலில் செல்ல அனுமதிக்காத வெலிகம புகையிரத நிலைய பொருப்பதிகாரி வெலிகம போலீசாரால் விசாரணைக்கு அழைப்பு
Posted by tahaval on January 01, 2020
28/12/2019
வெலிகம புகையிரதத்தில் முஸ்லீம் பெண் முகத்திறையை நீக்காததால்
புகையிரதம் நிலைய பொருப்பதிகாரி ரயிலை புறப்பட அனுமதி மறுத்தார்.
குறித்த விடையம் தொடர்பாக முறைப்பாடு செய்ததை அடுத்து நாளை 02.01.2020 வெலிகம பொலிஸ் நிலையத்திற்கு சம்பவத்துடன் புகையிரத பொறுப்பதிகாரிகள் விசாரணைக்காக வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெலிகமை புகையிரத நிலையத்தில் நடந்த சம்பவம்
மாலை 4:10
வெலிகமை புகையிரத நிலையத்தில்,
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்லும் கடுகதி புகையிரதத்திற்காக காத்திருந்த.வழமையான கூட்டம்.
புகையிரதம் சரியான நேரத்தில் வருவதாக அறிவிக்கப்பட்டது.
முஸ்லிம் பெண்ஒருவர் முகத்தை முழுவதும் மூடிய வன்னம் ஆண்குழந்தை ஒன்றை கையில் பிடித்தவளாக வந்து
புகையிரத நிலையத்தில் வேலைபார்க்கும் ஒருவர் வந்து பணிவுடன் முகத்திரையை அகற்றிக்கொண்டு ரயிலில் ஏரும்படி எடுத்துரைக்க அப்பெண் கணக்கில் எடுக்காது வேரெங்கோ பார்த்தாள்.
அப்போது அவள் கணவர் டிக்கட் எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தார்
அவரிடம் அவள் விஷயத்தைக் கூற அவரும் கணக்கெடுக்காது கையசைத்து ஏதோ கூறினார்.
விஷயம் நிலைய பொருப்பதிகாரிவரை செல்லும் போது,
புகையிரதமும் மேடைக்கு வந்து சேர்ந்துவிட்டது.
பயனிகள் அனைவரும் ஏறிக்கொள்ள இவர்களும் ஏறிக்கொண்டனர்.
புகையிரதம் புறப்படவில்லை.
புகையிரத நிலைய பொருப்பதிகாரி ரயிலை புறப்பட அனுமதி மறுத்தார்.
பின்பக்கத்திலிருந்து கார்ட் இறங்கிவர எல்லோரது பார்வையும் அங்கே திரும்பியது.
முகத்தை மூடியவண்ணம் பயணிக்க முடியாது என எடுத்துக்கூற, மக்கள் கூட்டம் அதிகரித்தது.
இவர்களால் தான் எல்லாப் பிரச்சினைகளும் என்று வழமை போல ஒருவர் கூற, மற்றவர்களும் சும்மா நேரம் எல்லாம் போகுது அநியாயமாக இவர்களால் என்றனர்.
அவர்களும் முகத்திரையை கழற்ற மருக்கவே, அவர்கள் இறங்கினால் தான் புகையிரதத்தை அனுப்புவேன் என நிலைய பொருப்பதிகாரி சப்தமிட அவர்கள் இருவரும் இறங்கி வெளியேறினர்.
புகையிரதம் கிளம்பியது.
அவர்களுக்கு டிக்கெட் காசு திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளைய தினம் 02.01.2020
ஒன்பது மணியளவில் இந்த சம்பவத்துடன் தொடர்பான புகையிரத நிலைய அதிகாரிகள் பொலிஸ் நிலையத்திற்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment