ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகளை இடை நிறுத்தவும் - முற்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவும் - சவுதியின் ஹஜ் அமைச்சகம் இலங்கைக்கு அறிவிப்பு
Posted by tahaval on March 11, 2020
ஹஜ் கடமைகளுக்கான ஏற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு சவுதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பழீல் மற்றும் முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஷ்ரப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல்கள், விமான சேவைகள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பணம் செலுத்தியவர்கள் அவற்றை மீள பெற்றுக் கொள்ளுமாறும் சவுதி அரேபிய ஹஜ் அமைச்சகம் இலங்கை தூதுவராலயத்திற்கு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை மேற்கொள்வதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
இவ்வருடம் ஹஜ் கடமைக்கான தடை விதிக்கப்படுமானால் உலக வரலாற்றில் ஹஜ் கடமை நிறைவேற்படாத வருடமாக வரலாற்றில் இது பதிவாகும் என்பது கவலைக்குறிய செய்தியாகும்.
0 Comments:
Post a Comment