வெலிகம நகரசபை தலைவர் இராஜினாமா புதிய நகரசபைத் தலைவர் நியமனம்.
Posted by tahaval on March 23, 2020
வெலிகம நகரசபைத் தலைவராகப் பணியாற்றிய ரொஹான் ஜயவிக்கிரம தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து, அவரது இடத்திற்கு பிரதித் தலைவராக இருந்த எம்.ஜே.எம். மின்ஹாஜ் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதனாலேயே அவர் குறித்த பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடந்தேறிய உள்ளூராட்சித். தேர்தலில் மின்ஹாஜ் அவர்கள் நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment