குளவிக் கொட்டிற்கு இலக்காகியவர் பலி
Posted by tahaval on May 13, 2020
அக்கரப்பத்தனை, டயகம மேற்கு 2ஆம் பிரிவு தோட்டத்தில் இன்று (13) குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக, டயகம பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அக்கரப்பத்தனை டயகம மேற்கு 2ஆம் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த செல்லமுத்து ஆறுமுகம் (69) என்பவராவார்.
குறித்த நபர் விறகு சேகரிக்க சென்றிருந்தபோது, அங்குள்ள மரத்தில் காணப்பட்ட குளவிக் கூடொன்று உடைந்து அதிலிருந்த குளவிகள் கலைந்து வந்து இவரை கடுமையாக தாக்கியுள்ளன.
குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் தற்போது டயகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலகே தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment