யுவதி ஒருவரை காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த “ரிஷ்வான்” மலைநாட்டில் சோகம்
Posted by tahaval on May 21, 2020
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த சுமார் 23 வயதுடைய யுவதி ஒருவர் தலவாக்கலை ரயில்வே கடவை பாலத்தில் இருந்து நீரினுள் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை கண்ட அவ்வழியாகச்சென்ற #ரிஷ்வான் எனும் நபரொருவர், யுவதியை காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்துள்ளார்.
நீரிழ் மூழ்கிய யுவதியை மேலே இழுத்துவிட்டு, அவர் நீருக்குள் மூழ்கியுள்ளார்.
எதேச்சையாக இதனை கண்ணுற்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உடனடியாக நீர் பாதுகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் இறங்கி யுவதியை காப்பாற்றியுள்ளார்.
எனினும், இப்பெண்ணை காப்பாற்ற முதலில் குதித்த ரிஷ்வான் நீரினுள் காணாமல் போயுள்ளார்.
2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (32) என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
பொலிஸாரும், கடற்படையின் சுழியோடிகளும், இராணுவத்தினரும் இணைந்து அவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி:கரு
-Almashoora madawala News
0 Comments:
Post a Comment