கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் பத்தாவது நபர் உயிரிழப்பு
Posted by tahaval on May 25, 2020
கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் பத்தாவது நபர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கிபிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பயாகலையை சேர்ந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்த நிலையில் அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை படி அவர் கொறோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. களுத்துறை – பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை திடீரென சுகயீனமுற்ற இவரை இராணுவம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக சீனக்குடா பொலிசாருக்கு இராணுவம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment