டெங்கு அதிகரிக்கும் வாய்ப்பு; எச்சரிக்கை!
Posted by tahaval on May 15, 2020
எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாட்டின் தென்மேற்கு பகுதியில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென, டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காணப்படும் இவ்வேளையில், டெங்கு நோய் தொடர்பிலும் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம் என, டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அநுர ஜயசேகர தெரிவித்தார்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால், கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்படும் IDH வைத்தியசாலையில் ஒரு பகுதியை அவர்களுக்காக ஒதுக்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment