உலக மாணவர்களின் கல்வியில் கொரோனா ஏற்படுத்திய அதிர்ச்சி!
Posted by tahaval on May 13, 2020
உலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு, ‘கொரோனா பெருந்தொற்று-கல்வியில் ஏற்படுத்திய அதிர்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே, 25 கோடி 80 இலட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படசாலையில் சேராமல் இருந்தனர். படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் அதிகமாக இருந்தனர். இதனால் கற்றல் குறைபாடு பெருமளவில் காணப்பட்டது.
கொரோனா வைரஸ் வந்த பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. உலகின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. நம் வாழ்நாளிலேயே கல்வித் துறைக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை பார்த்து விட்டோம்.
இந்த சுகாதார நெருக்கடி நிலை நடவடிக்கைகள், உலகளாவிய மந்தநிலையை உண்டாக்கும் போது, இந்த பாதிப்பு இன்னும் மோசமாகும்.
இந்தப் பிரச்சினையை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். முதல்கட்டமாக, பாடசாலைகளை மூடி, குழந்தைகளின் உடல்நலத்தை பாதுகாத்து விட்டோம். அடுத்தகட்டமாக பாடசாலைகளை திறக்க திட்டம் வகுக்க வேண்டும்.
படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், விரைவான கற்றல் திறனுக்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். நீண்டகால பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் அதை சமாளிக்க தீவிர தன்மையுடைய கொள்கை நடவடிக்கை எடுப்பது அவசியம்’.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment