பீஜிங்கில் வைரஸ் பரவல் கட்டுக்குள்
Posted by tahaval on June 20, 2020
சீனத் தலைநகர் பீஜிங்கில் அண்மையில் அதிகரித்த வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால்அந்நாட்டு நோய்க்கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் ஆங்காங்கே புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகலாம். இருப்பினும் வைரஸ் பரவல் அதிகரிக்கச் சாத்தியமில்லை என்று நிலையம் கூறியது.
சின்பாடி மொத்த விற்பனைச் சந்தையுடன் தொடர்பிலிருந்தோர் மூலம் வைரஸ் பரவுவதைக் குறைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வைரஸ் பரவல் மீண்டும் ஏற்பட்டதற்குக் குறைவான வெப்பநிலை, காற்றில் அதிகமான ஈரப்பதம் ஆகிய காரணங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுவரை 350,000க்கும் அதிகமானோரிடம் வைரஸ் தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment