புத்தளம் பகுதியில் பலருக்கு கொரோனா அறிகுறி
Posted by tahaval on July 11, 2020
புத்தளம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்ட த்திற்குட்பட்ட நாத்தான்டியா, ஆராச்சிக்கட்டுவ மற்றும் பல்லம ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
இந்த நிலையில் குறித்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக த்தளம் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவர்களுடன் தொடர்புடைய 50 பேர் சுயதனிமைப்படுத்தலுக் குட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் சிலரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment