வெலிகம பெலான பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய சாரதி உயிரிழப்பு.
Posted by tahaval on August 10, 2020
பெலியத்தவிலிருந்து மரதானைக்குச் சென்ற ரயிலில் கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று (09) மாலை 4.20 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
பெலானா பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் பணிபுரிந்த 35 வயது உடைய நபர் விபத்தில் இறந்துள்ளார்.
நுகேகோடா பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவை ஹோட்டலில் இறக்கிவிட்டு, மீண்டும் அவர்களை அழைத்து வர வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து ஹோட்டல் நோக்கி சென்ற போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ரயில்வே கடவையில் பணிபுரிந்த நபர் நேற்று பணியில் இருக்கவில்லை என்றும், ரயில் போக்குவரத்து சமிக்ஞை எரியவில்லை என்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், கார் ரயிலுடன் மோதியது, சுமார் 100 மீட்டர் முன்னோக்கி இழுக்கப்பட்டு சாலையில் இருந்து தூக்கி எறியப்பட்டு கம்பத்தில் மோதியது.
பலத்த காயங்களுடன் மாத்தறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த நபர் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார்.
0 Comments:
Post a Comment