வெலிகம பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் பிரச்சினைகளை முன்வைப்பதற்கும் வாய்ப்பு


வெலிகம பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், அபிவிருத்திக் குழுவின் தலைவரும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அர்கம் இல்யாஸ், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு அவை தொடர்பான கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அர்கம் இல்யாஸ் அவர்கள், அப்பகுதி ஊடகவியலாளர்களுக்கு மக்கள் பாதிப்படைந்துள்ள திட்டங்களையும் பிரச்சினைகளையும் உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் அவ்வப்போது நடாத்தப்பட்ட போதிலும், அந்த நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் தொடர்பில் உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment